சென்னை: தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்றுசிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலராக மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு உடல்உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த மருத்துவர் காந்திமதி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உறுப்பு மாற்று ஆணையத்தின் புதிய உறுப்பினர் செயலராக முதுநிலைமருத்துவ நிபுணரும், சென்னை ராஜீவ்காந்திஅரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான மருத்துவர்என்.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவத் துறையில் 32 ஆண்டு அனுபவம் கொண்ட என்.கோபாலகிருஷ்ணன், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி. படிப்புகளை நிறைவு செய்து, சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகத் துறையில் டி.எம். பட்டம் பெற்றார். பிரிட்டன் ராயல் கல்லூரியில் எம்ஆர்சிபி அங்கீகாரம் மற்றும் கவுரவப் பட்டம் பெற்ற இவர், 2011-ல்ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சிறுநீரகவியல் துறைதலைவராக பொறுப்பேற்றார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வராகவும் கூடுதல் பொறுப்பில் இருந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் அவரது ஒருங்கிணைப்புடன் 650-க்கும்மேற்பட்டசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் ராஜீவ் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா காலத்தில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய அவர், சிறுநீரகவியல் தொடர்பாக பல்வேறு சர்வதேச ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து, பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
சென்னையில் 2008-ல் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து, உடல் உறுப்பு தானம் குறித்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. தமிழக அரசு ‘மூளைச்சாவு உடல்உறுப்பு மாற்று திட்டத்தை’ உருவாக்கியது. அடுத்த சில ஆண்டுகளில், தமிழ்நாடு உடல்உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் உருவானது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago