சேலம்: சேலம் வழியாக இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் ஈரோடு- ஜோலார்பேட்டை இடையிலான பயணிகள் ரயில், 11-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயிலும் கோவை - காட்பாடி வரை மட்டுமே வரும் 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய 4 நாட்களுக்கு இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் வழியாக, ஈரோடு- ஜோலார்பேட்டை இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஈரோட்டில், காலை 6.25 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டைக்கு நண்பகல் 12.10 மணிக்கு சென்றடையும் ஈரோடு- ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலானது,11-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில், ஜோலார்பேட்டையில் மாலை 3.10 மணிக்குப் புறப்பட்டு, ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கு வந்தடையும் ஜோலார்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயிலும், 11-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இன்டர்சிட்டி ரயில்: இதனிடையே, கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயிலானது வரும் 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் - காட்பாடி இடையிலான ரயில் பாதையில், சித்தேரி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, கோவையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி (எண்.12680) விரைவு ரயிலானது வரும் 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் கோவை - காட்பாடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.
மறு மார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி ( எண்.12679) விரைவு ரயிலானது, வரும் 11-ம் தேதி, 18, 25, ஆகஸ்ட் 1-ம் தேதி ஆகிய நாட்களில், சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, காட்பாடி - கோவை இடையே மட்டும் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago