ஸ்வீடன் நாட்டு இளைஞரை மணந்த மதுரை பெண்: தமிழ் முறைப்படி நடந்த காதல் திருமணம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஸ்வீடன் நாட்டு இளைஞரை பெற்றோர் சம்மதத்துடன் சொந்த ஊரில் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டார்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு பெண் அல்லது ஆணை தமிழர்கள் மணப்பது ஆங்கொன்றும் இங்கொன்றுமாக மிக அரிதாகவே நடந்தது. அதுபோன்று நடக்கும் திருமணங்களை, ஊரே திரண்டு வந்து வியந்து வேடிக்கைப் பார்க்கும். ஆனால், தற்போது இம்மாதிரியான காதல் திருமணங்கள் அதிகளவு நடக்க ஆரம்பித்துள்ளன. அந்தளவுக்கு வெளிநாட்டினர், தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை விரும்பி தமிழர்களை காதலித்து தங்கள் துணைகளாக தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு மற்றொரு உதாரணமாக, ஸ்வீடன் நாட்டு இளைஞர் எட்வர்டு, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிவேதிதாவை காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

நிவேதிதாவின் தந்தை திருச்செல்வன் எல்ஐசியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஸ்வீடன் நாட்டில் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் நிவேதிதா பணிபுரிந்து வந்தார். அவருடன் அதே நகரைச் சேர்ந்த எட்வர்ட் வீம் என்பவரும் பணிபுரிந்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழக ஆரம்பித்துள்ளனர். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை எட்வர்ட், நிவேதிதாவிடம் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீது எட்வர்ட்டுக்கு ஏற்பட்ட ஆர்வமும், ஈர்ப்பும் நிவேதிதா மீதும் அவருக்கு ஏற்பட ஆரம்பித்தது. நிவேதிதாவிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே இப்படி காதல் மலர, பெற்றோர் ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் செய்வோம் என்பதில் பிடிவாதமாக இருக்கவே, பெற்றோர்கள் அவர்கள் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மதுரை திருமங்கலத்தில் இவர்களின் திருமணம், தமிழ் கலாச்சாரப்படி நடந்தது. ஐய்யர், தமிழ் மொழியில் மந்திரங்களை ஓத மாப்பிள்ளை, மனப்பெண்ணின் தாய்மாமன்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் மேளதாளங்கள் முழங்க நடந்தது. இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளை எட்வர்ட் குடும்பத்தில் இருந்து 70 பேர், விமானத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பே மதுரை வந்தனர். அவர்கள், திருமணத்திற்கு முந்தைய இடைப்பட்ட நாட்களில் தமிழ் வழக்கப்படி நடக்கும் திருமணங்களை கேட்டு தெரிந்துகொண்டு, அதன்படி, மாப்பிள்ளை-மணப்பெண் நிச்சயதார்த்தம், மணப்பெண்-மணமகன் அலங்காரம், மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு போன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடத்தினர்.

ஸ்வீடனில் இருந்து வந்த மாப்பிள்ளை எட்வர்டு குடும்பத்தினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து இந்த திருமணத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியின்போதும், ஆட்டம், பாட்டத்துடன் இரு வீட்டாரும் மொழி, மதம், இனம், கலாச்சாரத்தைக் கடந்து கொண்டாடினர். திருமணத்திற்குப் பிறகு, மறு வீடு விருந்து, பங்காளி வீட்டு விருந்து தொடர்ந்து தேனிலவு சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளையும் மதுரையிலே நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்