சிட்லபாக்கம் செல்வேந்திரன் ஊரை காலி செய்த விவகாரத்தில் பதிலளிக்கு மாறு காஞ்சிபுரம் எஸ்.பி.-க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கத்தை அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந் தவர் செல்வேந்திரன் (37). தகவல் உரிமை சட்ட ஆர்வலரான இவர், ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்த தால் உள்ளூர் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வந்ததையடுத்து ஊரை காலி செய்து விட்டு சென்னைக்கு அருகில் குடியேறி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சி புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறி யிருப்பதாவது:
தனக்கு கொலை மிரட்டல் விடுக் கப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையத்தில் செல்வேந்திரன் புகார் செய்துள்ளார். எனவே இந்த விவ காரம் தொடர்பான உண்மை நிலவரம், அதன் மீது தாங்கள் எடுத்த நடவடிக்கை விவரங்களை 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் அளிக்காவிட்டால், அரசியல் சாசன சட்டப்பிரிவு 338-ன் கீழ் ஆணை யத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிவில் நீதிமன்ற அதிகாரத்தின் அடிப்படையில் தாங்களோ, தங்கள் பிரதிநிதியோ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago