அரூர்: தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டுப்பட்டியில் அரசுப் பள்ளியையொட்டி அமைந்துள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டி மிகவும் பழுதடைந்துள்ளதால் விபரீதம் நிகழும் முன் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதியதாக கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பழைய ஒட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியையொட்டி இந்த தொட்டி உள்ளது. பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பழைய ஒட்டுப்பட்டி, புது ஒட்டுப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
குடிநீர் தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. தொட்டியை தாங்கும் தூண்களில் இரண்டும், தொட்டியின் அடிப்பகுதி யிலும் விரிசல் ஏற்பட்டு பெருமளவு சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள தொட்டி மூலமாகவே தற்போது வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வலுவில்லாத நிலையில் உள்ள தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
அவ்வாறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அருகில் உள்ள பள்ளி கட்டிடமும், அதில் பயிலும் மாணவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித்துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இது குறித்து அப்பகு தியைச் சேர்ந்த கேசவன் கூறுகையில், மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது குடிநீர் தொட்டி மிகவும் பழு தடைந்துள்ளது. ஆனாலும், அந்த தொட்டி மூலமாகவே தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இது மிகவும் ஆபத்தான செயல். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்துள்ள தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதியதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago