மதுரை: ஒற்றுமையாகச் செயல்பட்டால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூரில் நடக்கும் கலவரத்தால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஆனால், மணிப்பூரை போய் பார்க்கவில்லை. மணிப்பூர் பிரச்சினையை பிரதமர் சரி செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட்டால் மோடி ஆட்சியை வீழ்த்தி மத்தியில் ஆட்சியைப் பிடிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனாலும், பாஜகவுக்கு பெரும்பான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கும்.
பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்குள்ள சிலர் கூறுகின்றனர். எதுவும் உண்மை அல்ல. பிரதமர் எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகின்றனர்.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க நாடாளுமன்றத்தில் முடிவுசெய்யப்பட்டதாக அப்போதைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் என்னிடம் கூறினார்.
ப.சிதம்பரம் தடுத்தார்: மதுரை விமான நிலைய திறப்பு விழா நேரத்தில் அவர் மேடையில், அறிவிக்க இருந்தபோது, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அறிவிக்கவிடாமல் தடுத்தார்.
இதை திமுக, அதிமுகவினர் யாரும் ஆதரிக்கவில்லை. இவர்கள், கடிதம் கொடுத்தால் நாடாளுமன்றத்தில் பேசி, மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க ஏற்பாடு செய்வேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago