ஓசூர்: பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், அங்கு சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. மேலும், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், உரிய நேரத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை கிடைப்பதும் கேள்விக் குறியாகியுள்ளது.
ஓசூரை அடுத்த பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாதபடி எப்போதும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாமல் மருத்துவமனை வளாகத்தில் கொட்டி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலை நிலவி வருகிறது.
கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, கொசுக்கடிக்கு இடையில் நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையுள்ளது. சுகாதார நிலைய வளாகத்தின் திறந்தவெளி பகுதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் காடுபோல மாறியுள்ளது. இதனால், விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இக்குறைகளைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
» தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - நீலகிரி அவலாஞ்சியில் 18 செ.மீ. மழை பதிவு
இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: மாநில எல்லையில் உள்ள பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அதிக அளவில் கர்ப்பிணிகள், குழந்தைகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்குத் தினமும் ஏராளமான நோயாளிகள் கிராமப் பகுதியிலிருந்து வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு போதிய பராமரிப்பு இல்லாததால், வளாகத்தில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.
மருத்துவக் கழிவுகளைச் சுகாதார நிலைய வளாகத்தில் கொட்டுவதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்குத் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், சுகாதார நிலைய வளாகத்தில் சுகாதாரத்தைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago