எழும்பூர் - நாகர்கோவில் உள்ளிட்ட 7 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்புக்கு பதிலாக குளிர்சாதன பெட்டிகள் இணைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் உள்ளிட்ட 7 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டி, பொது பெட்டிகளுக்கு பதிலாக குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 7 விரைவு ரயில்களில் பெட்டிகள் இணைப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மன்னார்குடி - ராஜஸ்தான் பகத் கி கோதி விரைவு ரயிலில் 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு பொது பெட்டி நீக்கப்பட்டு, 1 இரண்டடுக்கு ஏசி பெட்டி, 3 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் வரும் 24-ம் தேதி முதல் இணைத்து இயக்கப்பட உள்ளன.

4 பெட்டிகள் நீக்கம்...: கோயம்புத்தூர் - குஜராத் மாநிலம் ராஜ்கோட் விரைவு ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் இணைக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர் - ஜோத்பூர் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, 1 பொது பெட்டி நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் வரும் 29-ம் தேதி முதல் இணைக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 1 பொது பெட்டி நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள்

வரும் ஆக.3-ம் தேதி முதல் இணைக்கப்பட உள்ளன. இவ்வாறு மொத்தம் 7 விரைவு ரயில்களில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்