இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர் 22 பேர் விடுதலை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 22 பேரை ஊர்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. படகின் உரிமையாளர்களை ஆவணங்களுடன் செப். 11-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரத்தை சேர்ந்த அந்தோணி பிரசாத் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா ஆகிய 5 மீனவர்கள் கடந்த ஜூன் 20-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

அதே நாளில் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழரசன், உதயகுமார், அகிலா ஆகியோருக்கு சொந்தமான 3 விடைப்படகுகளில் 17 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.இந்த 4படகுகளைச் சேர்ந்த மீனவர்களும் கடந்த ஜூன் 21-ம் தேதி நெடுந்தீவுஅருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர். அத்துடன் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 22 பேரையும் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் 22 பேரும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

பின்னர், இலங்கை கடல் எல்லைக்குள் மீண்டும் மீன்பிடிக்க வந்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 22 மீனவர்களையும் விடுதலைசெய்து நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட 4 படகுகளின் உரிமையாளர்கள் செப். 11-ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 22 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்