கும்பகோணம்: ஜூலை 8, 9-ம் தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வரும் 8-ம் மற்றும் 9-ம் தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மேலாண் இயக்குநர் இரா.மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வரும் ஜூலை 8-ம் மற்றும் 9-ம் தேதிகளில் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காகத் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை,நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகளும், திருச்சியில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பேருந்துகள் கூடுதலாக 7-ம்தேதி, 8-ம் தேதி என மொத்தம் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல், வார விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப சென்றிட வரும் 9, 10-ம் தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசு சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE