சென்னை: காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள் ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிராக, சிஐடியு வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது. இது தொடர்பான 5-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தொழிலாளர் தனி துணைஆணையர் எல்.ரமேஷ், 8 போக்குவரத்துக் கழகங்கள் தரப்பிலான அதிகாரிகள், சிஐடியு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர்அ.சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், எம்எல்எப் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங் கேற்றனர்.
கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் தரப்பில், ‘‘தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்களை நிர்வாகங்கள் மீறி வருகின்றன. எடுத்துக்காட்டாக விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உபகரணங்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் (சர்வீஸ் வேன்) 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இவற்றை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான நடவடிக்கையை அந்த நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதேபோல், பிற நிர்வாகங்களும் ஓய்வுபெற்றவர்களை பணிக்கு அமர்த்துதல், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதித்தல் என அறிவுறுத்தலை மீறி வருகின்றன’’ என்றனர்.
» அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை - கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
நிர்வாகங்கள் தரப்பில், ‘‘வாரிசு நியமனம், காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்’’ என்றனர்.
இறுதியாக தொழிலாளர் துறையினர் கூறும்போது, ‘‘காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும், வாரிசுநியமனம் தொடர்பாகவும் அரசுடன்பேச்சுவார்த்தை நடத்தி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்குவது சரியல்ல. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 18-ம் தேதி நடைபெறும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago