கோவை சுகுணாபுரம் அருகே கட்டப்பட்டு வந்த தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை சுகுணாபுரம் அருகே, தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பிரிவு அருகே தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கலைக்கல்லூரி ஆகியவை உள்ளன. இதன் மற்றொரு நுழைவுவாயில் பகுதி, சுகுணாபுரம் அருகேயுள்ள மைல்கல் மலைப்பாதை பகுதியில் உள்ளது.

இந்த கல்வி நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இந்நிலையில், விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. நேற்று மாலை சுற்றுச்சுவர் கட்டும் பணியில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். குழி தோண்டி, அதன் மீது கான்கிரீட் போட்டு, கருங்கற்களைக் கொண்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வந்தது. அப்போது லேசான மழையும் பெய்து கொண்டிருந்தது.

இந்நிலையில் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து கீழே சரிந்து விழுந்தது. சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு 10 அடி உயர சுற்றுச்சுவர் சரிந்து அதன் கற்கள் விழுந்த வேகத்தில் 5 தொழிலாளர்கள் அடியில் சிக்கினர்.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட கோவை தெற்கு தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு கற்களுக்கு அடியில் சிக்கி ஒருவரை உயிருடன் மீட்டனர்.4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

குனியமுத்தூர் போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ஜெகநாதன்(53), நாகெல்லா சத்யம்(48), ரபாகா கண்ணையன்(49), மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிஷ்கோஷ் என்பதும், காயமடைந்தவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பருன்கோஷ் எனவும் தெரியவந்தது.

போலீஸார் சடலங்களை பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பருன்கோஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாநகராட்சி பொறுப்பல்ல: சம்பவ இடத்தை பார்வையிட்ட துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் கூறும்போது, ‘‘2 மாதங்களுக்கு முன்னரே நாங்கள் வந்து பார்த்த போது மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது. சுவர் இடிந்து விழுந்ததற்கு மாநகராட்சி பொறுப்பேற்க முடியாது. பலமுறை மாநகராட்சி சார்பில், கல்லூரி நிர்வாகத்துக்கு இதுகுறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இந்த சுற்றுச்சுவர் கம்பிகள் எதுவும் இல்லாமல் வெறும் கற்களைக் கொண்டு கட்டியுள்ளனர். ஓடையை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்