சென்னை: சென்னை பெரம்பூரில் பழுதடைந்த ஒரு தெருவின் பெயர் பலகையை சீரமைக்க மாநகராட்சி தொலைபேசி எண்ணில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெரம்பூர் பேருந்து முனையம் அருகே நெல்வாயல் சாலையில் நுழைந்து, வலது பக்கத்தில் சீனிவாசன் தெரு உள்ளது. இந்த தெருவில் 120 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவை அடையாளம் கண்டு வர தெருவின் முன்பகுதியில் பெயர் பலகை உதவியாக இருந்துவந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த தெருவின் பெயர் பலகை சேதமடைந்தது. இதன்காரணமாக, சில நாள்களில் உடைந்து தொங்கிய அந்த பலகை பின்னர் காணவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் புகார் எண்ணுக்கு (1913) அந்த தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் கொடுத்தார்.
ஏப்ரல் 17-ம் தேதி அவருக்கு பதில் அனுப்பினர். அதில், உங்கள் புகாரின் பேரில், அந்த தெரு பெயர்பலகை சீரமைப்பு பணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று பார்த்துள்ளனர் என்று பதில் வந்தது. ஆனால், இதுவரை அந்த பெயர் பலகை அந்த இடத்தில் அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்த இளங்கோவன் கூறும் போது, "இத்தெருவின் பெயர்பலகை இதுவரை சீரமைத்து வைக்கவில்லை. வெறும் தூண் மட்டுமே மட்டுமே உள்ளது. இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் புகார் தெரிவித்தேன்.
» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: மதுரையில் ஒரே நாளில் 10 செ.மீ. மழை பெய்தது
» மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இதற்கு மாநகராட்சி புகார் எண்ணில் இருந்து பெறப்பட்ட பதிலில், அதை சீரமைத்து போல குறிப்பிட்டனர். இது, மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. எனவே, தெரு பெயர் பலகை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago