வேங்கைவயல் சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்குமாற்றக்கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம் இருமுறை வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ஒருநபர் ஆணைய நீதிபதி சத்தியநாராயணனின் விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்