உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு 6-ம் தேதிவரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளைக் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக, 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3,500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் 200 பேரிடர் கால நண்பர்கள் பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் 6-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைதொடர்ந்து, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 40 நபர்கள் இரு குழுக்களாக வரவைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர், உதகை மற்றும் கூடலூர் கோட்டத்துக்கு மழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். எனவே, பாதிப்புகளை எதிர்க்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளது.
இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள், மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035- என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும், உதகை கோட்டத்துக்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்துக்கு 04262-261295, உதகை வட்டத்துக்கு 0423-2442433, குன்னூர் வட்டத்துக்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718, குந்தா வட்டத்துக்கு 0423-2508123, கூடலூர் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூர் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொது மக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் காயத்ரி, உதகை வட்டாட்சியர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
20 hours ago