கடந்த நிதியாண்டில் ரூ.82 கோடி நஷ்டம் ஏற்பட்டபோதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன: துணை மேயர் மகேஷ்குமார் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களால் கடந்த நிதியாண்டில் ரூ.82 கோடி நஷ்டம் ஏற்பட்டாலும், அவை தொடர்ந்து இயக்கப்படுவதாக மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 141, 142, 169, 170 வார்டுகளில், 6 இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உணவகங்களில் உணவுப் பொருட்களின் இருப்பு, உணவின் தரம், சுவை போன்றவற்றை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 200 வார்டுகளில் 393 அம்மா உணவகங்களும், 7 அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு அம்மா உணவகமும் செயல்பட்டு வருகின்றன.

அம்மா உணவகங்கள் மூலமாக கடந்த 2022-23-ம்நிதியாண்டில் 6.70 கோடி இட்லிகள், 1.53 கோடி பலவகை சாதங்கள், 2.65 கோடி சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 5.3 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

முதல்வர் அறிவுறுத்தல்: இந்த காலகட்டத்தில் விற்பனை மூலம் ரூ.15.81 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால்செலவு ரூ.97.86 கோடி. ஏறத்தாழ ரூ.82 கோடி நஷ்டம் ஏற்பட்டாலும், சேவை மனப்பான்மையுடன், மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றுமுதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த செலவினத் தொகை முழுவதும் மாநகராட்சி செலவினங்களில் இருந்து மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள், தாங்கள் பணிபுரியும் இடத்திலேயே பசியாறும் வகையிலும் 3 நடமாடும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து9 ஆயிரத்து 959 கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.

சீரமைப்புப் பணிகள்: அம்மா உணவகங்களின் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.4.50 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்து, மண்டலஅளவிலேயே சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, நியமனக் குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், கவுன்சிலர் கே.ஆர்.கதிர்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்