கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானலில் ஞாயிற்றுக் கிழமை கூடும் வாரச்சந்தை நேற்று நடந்தது. இந்த சந்தையில் நகர் பகுதி மக்கள், மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதி கிராம மக்கள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்தச் சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வரு கின்றன.
இதில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே வரத்து குறைந்து விலை மெல்ல உயரத் தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைப் பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்றது.
ஆனால், நேற்று கொடைக்கானலில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந் தனர். தக்காளி இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலையில் விலையும் உயர்ந்துள்ளதால், அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், `மழையால் தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது.
» அரசுப் பள்ளிகளில் விநாடி-வினா போட்டிகள்
» சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டம்
இதனால் வரத்துக் குறைந்து விலை அதிகரித்துள்ளது. போக்குவரத்துச் செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி காரணமாக தரைப்பகுதியை விட மலைப் பகுதியில் விலை கூடுதலாக உள்ளது', என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago