ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்ட ஆர்.என்.ரவி, சற்று நேரத்தில் அந்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை ஆளுநர்பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கைகளில் கூறி யிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: முதல்வரின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட்டிருக்கிறார். இது சட்டத்துக்குப் புறம்பானது மரபுகளுக்கு எதிரானது. ரஃபேல் விமானம் வாங்கியதில், ட்ரோன் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதேபோல் 33 மத்தியஅமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்கள் பதவி நீக்கம் செய்யப்படு வார்களா?

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எல்லையில்லா அதிகாரம்கொண்டவராகக் கருதி செயல்படும் ஆளுநரின் மலிவான அரசியல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தில் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு களம் இறங்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அமைச்சர் செந்தில் பாலாஜிவிவகாரத்தில் அரசியல் சாசனத்தைஆளுநர் மீறியுள்ளார். எனவே, அரசியல் சாசன அடிப்படையிலான ஆளுநர் பதவியில் நீடிக்க ஆர்.என்.ரவி முற்றிலும் பொருத்தமற்றவர். குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரைத் திரும்பப் பெற வேண் டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு திமுக ஆட்சியின் மீது வன்மத்துடன் நடந்து கொள்ளும் இந்த ஆளுநர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் அவரை குடியரசுதலைவர் நீக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஆளுநரின் நடவடிக்கையால் எழுந்துள்ள சட்டரீதியான பிரச்சினையை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வதோடு, ஆர்.என்.ரவி விடுத்துள்ள அரசியல் ரீதியான சவாலைமக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள வும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், ஆளுநர்களை நியமிக்கும்போது ‘பூஞ்சி கமிஷன்' அளித் துள்ள பரிந்துரையின்படி மாநில முதல்வர்களைக் கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமாகா வரவேற்பு: இதற்கிடையே. ஆளுநரின் நடவடிக்கையை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது வரவேற்கத்தக்கது. அவர்மீது வழக்குகள் உள்ள நிலையில், உண்மை வெளிவர வேண்டுமானால் ஆளுநரின் முடிவு சரியானதே. எனவே, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட, நீதி நியாயம் நிலைநாட்டப்பட மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தமிழக ஆளுநரின் முடிவு அமைந்திருக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்