சென்னை: மின் வாரியத்தில் பணியிட மாற்றம் கோரி வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
அதனால், புதிதாக பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், இடமாற்றம் கிடைக்கப்பெறாதோரும் ஜூலை 1 முதல்இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும், பொறுப்பு அதிகாரியிடமும் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம்விண்ணப்பங்கள் பெறப்படுவதால், கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பம் செய்தவர்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஜூலை 15-ம் தேதியில் இருந்து ஒரு வாரத்துக்குள் பொறுப்பு அதிகாரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
» ஜூலை 3-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் - ஆளுநர் மாளிகை அறிவிப்பு | முழு விவரம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago