சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார்

By செய்திப்பிரிவு

சென்னை / கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த 2022 மே 17 என்றுதமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘சிதம்பரம் கோயிலில் உள்ள கனகசபையில் 7 முதல் 10 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்யமுடியும். ஆனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு வரும் சூழலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் மேற்கொள்ள அனுமதித்தால் அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும்.

கோயிலில் அன்றாடம் நடைபெறும் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடைபெறும் சூழலில் பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதித்தால் வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த அரசாணை சட்டவிரோதமானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்" என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் கற்பக கணேச தீட்சிதர், நகர காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிதம்பர் நடராஜர் கோயிலில் நான் கடந்த 27-ம் தேதி பூஜைக்காரராக தினப்படி கோயில் பூஜை செய்யும் பணியில் இருந்தேன். மாலை 6.45 மணி அளவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் திடீரென கனகசபையில் அத்துமீறி நுழைய முயன்றனர்.

அப்போது, எனது ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் என்னை தள்ளிவிட்டு, நிலைகுலைய வைத்து, கனகசபைக்குள் நுழைந்து, என் பூஜை பணிக்கு இடையூறு செய்து எதிர்பாராத வகையில் என் மீது தாக்குதல் நடத்தினர். என் தந்தை எஸ்.எஸ்.ராஜா தீட்சிதர் உள்ளிட்ட சிலர் எனக்கு உதவ முன்வந்தனர். எதிர்பாராத தாக்குதலால் மயக்கமாகி விட்டேன்.

பூஜை பணியை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை உள்ளதால், உடல் வலி, மன வலியை பொறுத்துக் கொண்டு, தெய்வ பணியை இரவு 10 மணிக்கு முடித்தேன். மறுநாள் காலையில் வலியுடன் பொறுப்பை அன்றைய பூஜைக்காரரிடம் ஒப்படைத்து, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். என் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கு அதிர்ச்சி, உடல் வலி உள்ளதாலும், நேரில் வந்து புகார் கொடுக்க மன தைரியம் இல்லாததாலும், புகாரை பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். புகார் மனுவின் நகல்களை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்.பி., சிதம்பரம் ஏஎஸ்பி ஆகியோருக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்