அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வு பணியில் சீன பானை ஓடு உள்ளிட்ட 3 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாளிகைமேட்டில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் ஏப்.6-ம் தேதி முதல் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 21 பணியாளர்களைக் கொண்டு 16 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு செங்கற்கலால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
11-ம் நூற்றாண்டில் வணிகம்: இந்நிலையில், சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, அலங்கரிக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை, 11-ம் நூற்றாண்டில் தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் இருப்பதாகவும், மேலும், இதுபோன்ற பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
23 hours ago