அனைத்து மக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்: விண்ணப்பிக்க ஜூன் 30-ம் தேதி கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து மக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாகும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர் களையும் ஊக்குவிக்கும் வகையில்இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போதுஅனைத்து குடிமக்களும் இ-சேவைமையங்கள் தொடங்கி, பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்துக்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாகும்.அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்