சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.17.15 கோடி, ஒப்பந்த நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்துவரும் 1.14 லட்சம் பணியாளர்களால், நாள்தோறும் 20,111 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.70 கோடி பயணிகள் பயன் பெறுகின்றனர்.
கரோனா பேரிடர் காலமான 2020-21 ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக பேருந்துகளை இயக்கின. அப்போது, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், முதல்வரின் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா காலத்துக்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோதிலும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 14-வது ஊதிய ஒப்பந்தத்தை 2019-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தி, உயர்வுடன் கூடிய ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்துக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்கவும் முதல்வர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago