தஞ்சை: தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தப் பணியில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று கூறி, தஞ்சை மாநகர உறுப்பினர் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாவத்தின் விவரம்:
மேயர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்துக்கு முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும்.
எஸ்.சி. மேத்தா (திமுக): ஆற்றில் தண்ணீர் வந்துள்ளதால் அய்யங்குளம், சமந்தான்குளம், அகழி ஆகியவற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
» அமெரிக்கா செல்ல விசா மறுப்பு: இலங்கைக் கவிஞர் தீபச்செல்வன் வேதனை
மேயர்: இதற்கு ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏ.காந்திமதி (அதிமுக): தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோயில் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், கீழவாசல் ரவுண்டானா மற்றும் கொடிமரத்து மூலையில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சென்று வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸாரை அங்கு பணியமர்த்த வேண்டும்.
ஆனந்த் (திமுக): பாலோபநந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் தரமாக அமைக்காததால், பொருத்திய நாளிலிருந்து பிரதான குழாயிலிருந்து குடிநீர் வெளியேறுகிறது. மேலும், காமராஜர் மார்கெட்டில் சரியான செயல்பாடு இல்லாததால் 100 கடைகளைத் திரும்ப ஒப்படைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேயர்: குடிநீர் குழாய் உடனே சீர் செய்யப்படும், மார்க்கெட்டில் கடையை ஒப்படைப்பதாகக் கூறுபவர்களை எங்களிடம் பேசுமாறு கூறுங்கள்.
ஜெ.வி. கோபால் (அதிமுக): எனது வாடில் 90 சந்துகள் உள்ளன. ஆனால், தூய்மை பணிக்கு 3 பணியாளர்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். சாக்கடைகளில் உள்ள அடைப்புகளைத் தூர் வருவதற்கு 2 பணியாளர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
மேயர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
கே. மணிகண்டன் (அதிமுக): கடந்த 10 மாதத்திற்கு முன் 10 நாளில் மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரம் குடிநீர் வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள். ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
மேலும், மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை ஒப்பந்ததாரர்தான் செலுத்த வேண்டும். ஆனால், விதிமுறையை மீறி தூய்மை பணியாளர்களிடம் 30 சதவீதம் பிடித்தம் செய்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆணையர்: இத்திட்டத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. இது தொடர்பாக வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளலாம்.
மேயர்: 24 மணி நேரம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் தங்களுக்கு முழு விவரங்கள் அளிக்கப்படும்.
அப்போது, ஒப்பந்த பணியாளர்கள் ஒப்பந்தத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதால், நாங்கள் வெளிநடப்பு எனக் கூறி அதிமுக உறுப்பினர் மணிகண்டன் தலைமையில் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்களே வஞ்சிக்காதே என முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து மணிகண்டன் (அதிமுக) செய்தியாளர்களிடம் கூறியது: “இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் 250 பேருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த மாதம் பணிகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் ஈஎஸ்ஐ, பிஎப் என சுமார் ரூ. 5 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு ரூ. 10 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்குகிறார்கள்.
இது தொடர்பாகக் கேள்வி கேட்டால் உங்களுடைய வேலை பறிபோய்விடும் என மேயர் மிரட்டியுள்ளார். ஒப்பந்த பணியாளர்களைத் தவிர்த்து நிரந்தர பணியாளர்களைப் பள்ளி, பூங்காக்களில் பணியமர்த்தியதால், குப்பை சேகரிப்பதற்கான பணியாளர்கள் குறைந்ததால் தஞ்சாவூர் முழுவதும் குப்பைக் காடாக காட்சியளிக்கிறது.
ஒப்பந்தத்தாரரிடம் கடந்த மாதம் பணிகள் வழங்கியும் இதுவரை எந்தப்பணியும் செய்ய வில்லை. ஆனால், ரூ.1 கோடிக்கான ரசீதை வழங்கியுள்ளார்கள். இதில் அவர்கள் ரூ.50 லட்சத்தை மட்டுமே ஊதியமாக வழங்கி விட்டு, மீதமுள்ள ரூ.50 லட்சத்தில் ஊழல் செய்துள்ளார்கள். இது தொடர்பாக கேள்வி கேட்டதால், கூட்டத்தை முடித்துக் கொள்கின்றோம் என மேயர் கூறியதால், இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்,
பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் பேசும்போது, “தூய்மைப் பணியை ஒப்பந்த அடிப்படையில் விடுவது தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடப்பட்டுள்ளது. இப்பணி ஒரு மாதம் நிறைவடைந்து, 2-வது மாதம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, வேலையே தொடங்கவில்லை எனக் கூறுவது தவறு. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago