சென்னை: கோயம்புத்தூர், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெறும் நிலையில், வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதுபோல, கோயம்புத்தூர், மதுரை உள்பட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதிலும், கோயம்புத்தூர்,மதுரையில் முறையே ரூ.9,000 கோடி, ரூ.8,500 கோடி என ரூ.17,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 - 24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்காக ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, இந்த ஆய்வு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்கிடையே, சென்னையில் இருந்து கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் சென்று, ஆய்வு நடத்தி வருகின்றனர். விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக ஆலோசித்து உள்ளனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எங்கெல்லாம் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன, பேருந்து, ரயில் நிலையங்கள் இணைப்பு பகுதிகள், பயணிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது குறித்து கடந்த இரண்டு நாள்களாக கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ஆய்வு நடைபெறுகிறது.
விரிவான திட்ட அறிக்கையை வரும் ஜூலை 15ம் தேதிக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவிடங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் இதில் இடம்பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago