சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராமணர்களை புறக்கணிப்பதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் எம்.பி. வா.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு: தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிராமணர்களைப் புறக்கணிக்கிறார் என்றுதிட்டமிட்ட ரீதியில் வதந்தி பரப்புகின்றனர்.
நான் பிராமண சங்க அமைப்பினருடனும் பரவலாக மாநிலம் முழுவதும் பிராமணர்களோடும் நல்ல தொடர்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். பலர் என்னிடம் பேசி வருவதில் இருந்து ஒரு தெளிவான கருத்து வெளிப்படுகிறது.
தமிழகத்தில் பிராமணர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அண்ணாமலைக்குதான். அண்ணாமலை தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை, புதிய எழுச்சியை ஏற்படுத்த முழுமூச்சுடன், ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படுகிறார். எனவே அவர் மீது உள்ள நம்பிக்கையால் தமிழகத்தில் பிராமணர்கள் அவரின் பின் பெருமளவில் அணிதிரண்டு நிற்கின்றனர்.
» நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
» கிறிஸ்தவ மத போதகரை தாக்கிய விவகாரம் - திமுக எம்.பி. உட்பட 33 பேர் மீது வழக்கு பதிவு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் இரண்டு முக்கியத் துறைகளில் பிராமணர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே பாஜகவோ, தலைவர் அண்ணாமலையோ தமிழகத்தில் பிராமணர்களை புறக்கணிக்கின்றனர் என்பது திசை திருப்பும் முயற்சியாகும். திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சி. இதில் சில பிராமணர்கள் ஈடுபடுவது வேதனை. ஆனால் தமிழக பிராமணர்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாக மாட்டார்கள். அவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.
தமிழக பிராமணர்கள் ஜாதி பார்த்து வாக்களிப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலை குறித்து நன்றாக தெரியும். மோடியும் அண்ணாமலையும் நேர்மையான, நியாயமான நல்லாட்சி தருவார்கள் என திடமாக நம்புகின்றனர்.
தமிழக பிராமணர்கள் விரும்புவது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமையும்போது அதில் தமிழகத்தின் பங்கும் இருக்க வேண்டும் என்பதுதான். நமது ஒற்றை இலக்கு தமிழகத்தில் இருந்து மோடிக்கு ஆதரவாக 25 எம்.பி.க்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் பாஜகவில் இருந்த வா.மைத்ரேயன், அதிமுகவில் இணைந்து அதன்பிறகு மீண்டும் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago