மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் ரெகுபதி சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
போரூரை அடுத்த மவுலிவாக் கத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி, 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந் தது. இதில், 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தென்னகத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய கட்டிட விபத்து இது என்பதால், பொதுமக்க ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா, நீதியரசர் ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளார். மேலும், சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதியரசர் ரெகுபதி விபத்து நடந்த இடத்துக்கு வெள்ளிக் கிழமை (ஜூலை 11) நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளார். அப்போது, விபத்து நடந்ததற்கான காரணம், கட்டிடத்தின் கட்டுமான தரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு செய்வார். இதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago