திண்டுக்கல்: சின்ன வெங்காயம் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு கிலோ ரூ.100-ஐ தொடுவதற்கு வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனால் திண்டுக்கல் நகரில் வெங்காயத்துக்கு எனத் தனியாக ஒரு மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாள் கூடுகிறது. இங்கு மொத்தமாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனைசெய்கின்றனர்.
இதோடுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் திண்டுக்கல்லில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மற்றும் இதன் சுற்றுப்புற மாவட்டங்களான கரூர், திருப்பூர், தேனி மற்றும் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த வெங்காயங்களை கொண்டுவந்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.
பெரிய வெங்காயம் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து லாரிகளில் மொத்தமாக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
» நாடு முழுவதும் தக்காளி கிலோ ரூ.80 - ரூ.100-க்கு விற்பனை: விலை மேலும் உயரும் அபாயம் ஏன்?
ஜூன் மாத துவக்கத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-ஐ கடந்து விற்பனையானது. இதன்பின் படிப்படியாக விலை உயர்ந்து இன்று ஒரு கிலோ வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ரூ.80 க்கு விற்பனையானது.
வரத்து தொடர்ந்து குறைந்த வரும் நிலையில் தேவை அதிகரிப்பு காரணமாக விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-ஐ எட்ட வாய்ப்புள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.
இதுகுறித்து வெங்காயம் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், ”கடந்த முறை வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் விலை கிடைக்காமல் இழப்பை சந்தித்ததால், இந்த முறை குறைந்த பரப்பிலேயே வெங்காயம் பயிரிட்டனர். இதன் விளைவாக தற்போது வரத்து குறைந்து விலை அதிகரிகத்துள்ளது. இந்த நிலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வாய்ப்புள்ளது. புதிதாக நடப்பட்ட வெங்காயம் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
சின்ன வெங்காயம் சதமடிக்க காத்திருக்கும் நிலையில் பெரிய வெங்காயத்தில் நிலை ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்த விலையில் விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago