தன்னைப் பற்றி விசாரணை நடத்தியதாக 2 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பழனிசாமி அவமதிப்பு வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, வெற்றி பெற்றார். ``தேர்தலின்போது, தனதுவேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் தவறாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் நடவடிக்கைஎடுக்க உத்தரவிட வேண்டும்'' எனக்கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதித்து, வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்குபதிவு செய்யப்பட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் பழனிசாமி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை வழக்கை துரிதப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில், ``உயர் நீதிமன்ற உத்தரவை மீறி எனது வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணியும், எஸ்ஐ குணசேகரும் கேட்டுப் பெற்றுள்ளனர்.

என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டு நான் படித்த கல்லூரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே, அவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரியிருந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காணொலி காட்சி வாயிலாக விசாரித்த நீதிபதிஜி.கே.இளந்திரையன், சம்பந்தப்பட்ட போலீஸார் இருவரும் வரும் ஜூலை 7-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்