பதிவுத்துறை காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பதிவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பவும், பொதுமக்கள் காத்திருக்காமல் உடனுக்குடன் பதிவுப்பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் பதிவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட பணி சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பதிவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதல்வர் வழங்கிய அறிவுரைகள் அடிப்படையில், தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கட்டிடங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பத்திரங்களை உடனுக்குடன் முடித்து வருவாய் ஈட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்திரங்கள் பதியப்படும்போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காத வண்ணம் உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேர்மையான முறையில் பதிவு நடைபெறும் வகையிலும் இடைத்தரகர்கள் பதிவு நடைபெறும் இடத்தில் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுத் துறையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தற்போது காலியாக உள்ள 85 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன், அவருடைய மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15 நாட்களில் புகார் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்