மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக, பகுஜன் சமாஜ் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செனாய் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மத்திய வட்டார அலுவலகத்தில் நான்காவது நாளாக வியாழக்கிழமை நடந்தது.
மத்திய சென்னை தொகுதியின் தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையருமான ஜி.கே.அருண்சுந்தர் தயாளனிடம் தேமுதிக வேட்பாளர் ஜெ.சி.ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், தேமுதிக மத்திய சென்னை மாவட்ட செயலர் செந்தாமரைக் கண்ணன், மதிமுக ஆயிரம் விளக்கு பகுதி செயலர் ரெட்சன் அம்பிகாபதி, பாமக மாநில துணைத் தலைவர் ஜெய் சங்கர் உடனிருந்தனர். பின்னர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முரளி கிருஷ்ணன் தன் கட்சி நிர் வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
எம்.முகமது அஜீஸ், எம்.தாயுமானவர், எம்.அன்பழகன், செந்தில்குமார், டி.சாலமோன் ஆகிய 5 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago