காளையார்கோவில் | விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழப்பு - பள்ளி முடிந்து ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் சென்றதால் விபரீதம்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். பள்ளி முடிந்து ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் சென்றதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

காளையார்கோவில் அருகே சிரமம் ஊராட்சி என்.மணக்குடியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிரமம் ஊராட்சி செயலராக உள்ளார். இவரது மகன்கள் சூரியபிரசாத் (16) பிளஸ் 1-ம், உதயபிரசாத் (14) பத்தாம் வகுப்பும் கொல்லங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தனர்.

இந்நிலையில் இன்று மாலை இருவரும் பள்ளி முடிந்து தங்களது ஸ்கூட்டரில் அதே பள்ளியில் பிளஸ் 1 படித்த கொல்லங்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் மிஸ்சில்பாண்டி (16), கவுரிப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் மகன் கார்த்திகேயன் (16) ஆகிய இருவருடன் சேர்ந்து நான்கு பேரும் சென்றனர்.

கொல்லங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில், சூரியபிரசாத், உதயபிரசாத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்