சென்னை: தமிழகத்தில் இன்று யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பின் பூஜ்ஜியம் என்ற நிலை சாத்தியமாகியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45-வயதான ஒருவருக்கு தமிழகத்தில் முதன்முதலாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் ஓமன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பியிருந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இன்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக மருத்துவத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் தற்போது 16 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இன்று யாருக்கும் கரோனா பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா!
» அனுமதியில்லாத இடங்களில் ஆடு, மாடு வெட்டப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு
மேலும், இதுவரை தமிழகத்தில் 35 லட்சத்து 72,497 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இன்று ஒருவர் வீடு திரும்பியுள்ளார். நேற்று தமிழகத்தில் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago