“சிரமத்துக்கு வருந்துகிறோம்” - ஒளிப்பதிவாளர் பி.சிஸ்ரீராம் புகாருக்கு மின் துறை அமைச்சர் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: சீரற்ற முறையில் மின் விநியோகம் இருப்பதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், “உடனடியாக நடவடிக்கை எடுப்படும்” என மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாந்தோம், ஆழ்வார்பேட்டை பகுதிகளில் மின் விநியோகம் சீரற்ற முறையில் உள்ளது. என்னதான் நடக்கிறது?” என கேள்வி எழுப்பி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ட்விட்டரில் டேக் செய்திருந்தார்.

அவரின் ட்வீட்டை மேற்கொள்காட்டி பதிலளித்த நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “உடனடியாக இந்தப் பிரச்சினையை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். நகரம் முழுவதும் மின்உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிரமத்துக்கு வருந்துகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE