சென்னை: ஓய்வுபெற்ற ஓட்டுநர்களை மீண்டும்பணிக்கு அழைப்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிஐடியு, ஏஐடியுசி தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூறுகையில், “போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமனம் செய்யக் கூடாது என வலியுறுத்தி அளிக்கப்பட்ட வேலைநிறுத்த நோட்டீஸ் சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஸ்டேடஸ் கோ (நோட்டீஸ் வழங்கப்படுவதற்கு முன்பிருந்த நிலை) கடைப்பிடிக்க வேண்டுமென தொழிலாளர் துறைஅறிவுறுத்தியது.
ஆனால், நிர்வாகங்கள் தற்போது ஓய்வுபெற்ற ஊழியர்களை பணிக்கு அமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. எனவே, வேலைநிறுத்த அறிவிப்பில் கொடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை 3-ம் தேதி தமிழகம் முழுவதும் தொழிலாளர்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) நிர்வாகிகள் கூறுகையில், “14-வது ஊதியஒப்பந்த நிலுவைத் தொகை வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த முறை, ஓய்வுபெற்ற ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்கக் கூடாது, ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, கரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு சிறப்பு ஊதியம்வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல அளவில் ஜூலை 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago