சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங்கிற்கு செலுத்தும் உண்மையான மரியாதை: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங்கிற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது பதிவில் கூறியுள்ளதாவது: ''விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் சமூகநீதியை தழைக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்களில் அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்த முதன்மையானவர் வி.பி.சிங். அரச குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு இட ஒதுக்கீடு முக்கியம் என்பதை உணர்ந்து மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியவர் அவர்.

வி.பி.சிங் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சமூகநீதி தழைக்கவும், சமூகநீதிக் கொடி உயரப் பறப்பதை உறுதி செய்யவும் நாம் உழைக்க வேண்டும். அதுவே சமூகநீதி நாயகனுக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்