சென்னை: வெளிநாட்டில் சம்பாதித்து கணவர் அனுப்பிய பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளில், விவாகரத்தான மனைவிக்கும் சமபங்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த கண்ணையா என்பவருக்கும் பானுமதிக்கும் கடந்த 1965-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. சவுதி அரேபியாவில் பணிக்கு சென்ற கண்ணையா, தனது மனைவி பானுமதிக்கு பணம் அனுப்ப, அந்த தொகையை வைத்து சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பானுமதி தனது பெயரில் 5 சொத்துகள் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார்.
அதன் பிறகு 1994-ம் ஆண்டு ஊர் திரும்பிய கண்ணையா, தனது மனைவி சேதுராமன் என்பவருடன் குடும்பம் நடத்தி வருவதை கண்டு அதிர்ந்து விவாகரத்து பெற்றுள்ளார். அத்துடன் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துகளில் பானுமதிக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி 1995-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் கீழமை நீதிமன்றம், 2 சொத்துகள் மற்றும் நகைகள் பானுமதிக்கு சொந்தமானது என்றும், மற்ற 3 சொத்துகள் கண்ணையாவுக்கு சொந்தமானது என்றும் தீர்ப்பளித்தது. இதற்கிடையே கண்ணையா இறந்துவிட்டதால் அவரது மகன்கள், சிதம்பரம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. கண்ணையாவின் மகன்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதியும், தற்போது 78 வயதான பானுமதி தரப்பில் வழக்கறிஞர் வி.அனுஷாவும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கணவர் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் விவாகரத்து பெற்ற மனைவி தனது பெயர்களில் வாங்கிய சொத்துகளில், அவருக்கு பங்கு இல்லை என கூறிவிட முடியாது. மனைவியை கணவரின் பினாமியாகவும் பார்க்க முடியாது. எனவே, முதல் இரு சொத்துகளிலும் கண்ணையாவின் வாரிசு தாரர்களுக்கும், பானுமதிக்கும் சமபங்கு உரிமை உண்டு. மற்ற சொத்துகள், நகைகள் பானுமதிக்கே சொந்தம்’’ என தீர்ப்பளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago