உதகை: உதகை பூங்கா பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட புதிய கடைகள் திறக்கப்படாமல் உள்ளதால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வியாபாரிகளுக்கும் பலனில்லாமல் உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே நடைபாதை, சாலை ஓரங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடை வைத்து கேரட் போன்ற காய்கறிகள், வேர்க்கடலை, பூக்கள், விதைகள், சோளம், விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 120 கடைகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. சாலையோர வியாபாரிகள் நலன் கருதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் நகராட்சி சார்பில் முதற்கட்டமாக 55 நிரந்தரக் கடைகள் கடந்த பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டன.
இதில் 36 கடைகள் ஏற்கெனவே கடை வைத்திருந்த சாலையோர வியாபாரிகளுக்கும், மீதமுள்ள கடைகளை டெண்டர் மூலம் ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகளிடையே மோதல் ஏற்பட்டதால், அனைத்து கடைகளும் திறக்கப்படாமல் உள்ளன.
» அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
» கோவை, திருப்பூர், நீலகிரியில் மூடப்பட்ட 47 டாஸ்மாக் மதுக் கடைகளின் விவரம்
கோடை சீசன் நிறைவடைந்த நிலையிலும் கடைகள் பூட்டிக் கிடப்பதால், வழக்கம்போல கடைகளை நடைபாதைகளில் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், நகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிறு வியாபாரிகள் கூறும் போது, ‘‘தற்போது 55 கடைகள் கட்டியுள்ள நிலையில் 36 கடைகள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை பெற ரூ.1 லட்சம் வைப்புத் தொகை, ரூ.1 லட்சத்துக்கான சொத்து மதிப்பு சான்று செலுத்த வேண்டும் என டெண்டரில் தெரிவிக்கப்பட் டுள்ளது. வெளிநபர்களுக்கு கடைகளை ஏலம் விடுவதை தவிர்த்து அனைத்து கடைகளையும் எங்களுக்கே ஒதுக்க வேண்டும்,’’ என்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறியதாவது: தாவரவியல் பூங்கா சாலையில் நகராட்சி இடத்தில் 55 நிரந்தர கடைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து கடைகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டுமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாருக்கு கடை ஒதுக்க வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம் என அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் பொது ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த கடைகள் 4 அடிக்கு 4 அடி என்ற பரப்பளவில் சிறியதாக உள்ளதாகவும், இதற்கு ரூ.7,500 என அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் வாடகையை குறைக்க முடியாது. எனவே, அரசிடம் வாடகையை மறு பரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். வாடகை மறுசீரமைப்பு உத்தரவை அரசு வழங்கிய பின்னர் கடைகள் ஏலம் விடப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago