சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று (ஜூன் 23) காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆளுநர் ரவி, வரும் 27ம் தேதி சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில்பாலாஜி கவனித்து வந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமியிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவையில் செந்தில்பாலாஜி தொடர எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago