கவுரவ விரிவுரையாளர்கள் 5,699 பேரை நியமித்து அரசாணை

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக துறையின் செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கலாம்.

இவர்களுக்கு 11 மாதங்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதற்கான செலவினமாக ரூ.125 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE