அரசு திட்டங்களில் பயன்பெற உழவன் செயலி மிக அவசியம் - முழு வழிகாட்டுதல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: வேளாண் சார் அரசு திட்டங்களில் பயன்பெற உழவன் செயலியில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று விழுப்புரம் ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், “கடந்த 2021-22-ம் ஆண்டு முதல், கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 139 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் தேவையை வேளாண் துறைக்கு தெரிவித்து, முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெற ‘உழவன் செயலி’ என்ற செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், இந்த செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து, உரிய பதிவுகள் மேற்கொண்டு, துறைகளின் திட்டப்பலன்களை அறிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உழவன் செயலியை பதவிறக்கம் செய்து, பயன்படுத்தும் ஒரு விவசாயி என்னென்ன பலன்களை பெறலாம் என்று வேளாண் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘உழவன் செயலி’ தற்போது புதுப்பிக்கப்பட்டு, 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இச்சேவைகளை தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பெற முடியும்.

இதுவரை, சுமார் 15 லட்சம் பயனாளிகள் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள். இடுபொருள் முன்பதிவு மற்றும் இடுபொருட்களை பெற இதில் பதிவு செய்திடலாம்.

அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள், உரங்கள் இருப்பு நிலை, தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள ரசாயன உரங்களின் இருப்பு, அதன் விலை பற்றிய விவரங்களையும் அறியலாம்.

உங்கள் பகுதியில் உள்ள வேளாண் கிடங்கில் தினசரி விதை இருப்பு மற்றும் கன்றுகள் இருப்பு, வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள இயந்திரங்கள், வாடகை முன் பதிவு பற்றிய விவரங்களை அறியலாம்.

இதுதவிர சந்தை விலை நிலவரம், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை, வானிலை அறிவுரைகள், மாவட்ட வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்புகளை அன்றாடம் அறியலாம்.

மேலும் உங்கள் கிராமங்களுக்கு வருகை தரும் உதவி வேளாண்/ தோட்டக்கலை அலுவலர்களின் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்கள், தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் மேட்டூர் நீர்த்தேக்கத்துக்கு ஆதாரமாய் விளங்கும் கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய அணைகளின் தினசரி நீர் அளவுகளை அறியலாம்.

வேளாண் செய்திகள், வேளாண் தொடர்பான அறிவிப்புகள், துறையின் பத்திரிகை வெளியீடு, தொழில்நுட்பங்கள், விலை முன்னறிவிப்புகளை இதில் இடம் பெறச் செய்கிறோம் இது தவிர வேளாண், தோட்டக்கலை பயிர் களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள், இயற்கை பண்ணை பொருட்கள், அங்கக முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வியாபாரிகள் மற்றும் சான்றளிப்பு முகமைகள் பற்றிய விவரங்கள், பூச்சி, நோய் கண்காணிப்பு, பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் ஆகியவற்றையும் அளிக்கிறோம்.

இந்தச் செயலியின் மூலமே அரசு வழங்கும் வேளாண் கல்விச் சுற்றுலா மற்றும் வேளாண் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யவும் வியாபாரிகளின் முகவரிகளை பதிவிடு கிறோம். தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை இதன் மூலம் தொடர்பு கொள்ள முடியும்” என்று தெரிவிக்கின்றனர்.

‘உழவன் செயலி’ ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு வகை கைபேசியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்