மயிலாடுதுறை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்கவே அமலாக்க துறை சோதனையை மத்திய அரசு ஏவி விடுவதாக அமைச்சர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சரும், திமுக இளைஞரணி மாநிலசெயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: தமிழக முதல்வரின் முயற்சியால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கிலேயே, எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத் துறை சோதனையை மத்திய பாஜக அரசு ஏவி விடுகிறது. திமுக இதற்கெல்லாம அஞ்சப்போவதில்லை.
கட்சியின் சாதாரண கிளைச் செயலாளரைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனைகள் மேற்கொண்டபோதும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவர்களை மிரட்டி பணிய வைப்பதற்காகவே சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், அதிமுக போல திமுக ஒருபோதும் அடிபணியாது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், 1,000 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழி, 303 பேருக்கு தையல் இயந்திரங்கள், 63 பேருக்கு சலவைப் பெட்டிகள், 47 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, செம்பனார்கோவிலில் இ-சேவை மையத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago