பெட்ரோல், டீசலில் கலப்படம் - 3 ஆண்டில் 225 புகார்கள்: தரத்தை அறிவது பற்றி அதிகாரிகள் விளக்கம்

By க.சக்திவேல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், சில பெட்ரோல் நிலையங்களில் அளவு குறைவாக விநியோகிப்பதாகவும், தரம் சரியில்லை எனவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் (2017 ஜூன் வரை) பெட்ரோல், டீசல் கலப்படம் குறித்து 225 புகார்களும், அளவு குறைவாக விநியோகித்ததாக 264 புகார்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், எரிபொருட்களின் சரியான அளவு, கலப்படத்தை வாடிக்கையாளர்கள் எவ் வாறு தெரிந்துகொள்ளலாம் என் பது குறித்து இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

முந்தைய விதிமுறைகளின்படி பெட்ரோல் நிலையங்களில் 5 லிட்டர் பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டால், அதில் அதிகபட்சம் 25 மி.லி குறைவாக இருக்கலாம். அதற்குமேல் விநியோகத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருக்கக்கூடாது என்று இருந்தது. ஆனால், மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி அளவில் குறைபாடே இல்லாத வகையில் (ஜீரோ டாலர்ன்ஸ்) எரிபொருளை விநியோகிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் எரிபொருளின் அளவு குறைவாக இருப்பதாக கருதினால், பெட்ரோல் நிலையத்திலேயே அதனை அளவிட்டு கொள்ளலாம். இதற்காக அனைத்து பெட்ரோல் நிலையத்திலும் 5 லிட்டர் அளவு கொண்ட கொள்கலன் இருக்கும். இதனை கேட்டுப்பெற்று வாடிக்கையாளர்கள் அளவினை உறுதி செய்துகொள்ள முடியும்.

பெட்ரோல் தரத்தில் உள்ள குறைபாட்டை 2 வழிமுறைகள் மூலம் பெட்ரோல் நிலையத்திலேயே பரிசோதித்து தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும், வாட்மேன் பில்டர் பேப்பர்களை (வடிதாள்) வைத்திருப்பார்கள். அதில் 2 துளி பெட்ரோலை இட்டால் 30 விநாடிகளில் அது ஆவியாகிவிடும். பேப்பரில் எந்த கறையும் இருக்காது. ஒருவேளை கலப்படம் இருந்தால், பெட்ரோல் மெதுவாக ஆவியாவதோடு, பேப்பரில் கறை படிந்திருக்கும்.

இரண்டாவதாக பெட்ரோலின் அடர்த்தியை வைத்து கலப்படம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் ‘ஹைட்ரோ மீட்டர்’ கருவி இருக்கும். பெட்ரோல் அல்லது டீசலை 500 மிலி அளவுள்ள ஜாரில் நிரப்பி, அதில் ஹைட்ரோமீட்டர் கருவியை இட்டு விதி முறைகளின்படி உள்ள அடர்த்தியை ஒப்பிட்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உரிமம் ரத்து

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹைதர் அலி கூறும்போது, “விதிகளின்படி ஒரு விற்பனையாளர் கலப்படம் செய்வது குறித்து புகார் அளிக்கப்பட்டு, அந்த புகார் உண்மையால் முதல் நடவடிக்கையாக அவரது உரிமம் ரத்து செய்யப்படும். அவருக்கு எந்தவித இரண்டாவது வாய்ப்பும் அளிக்கப்படாது. எனவே, தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலும், பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் இயந்திரங்கள் அனைத்தும் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. அவை எங்களுடையது அல்ல.

அதில், உள்ள அளவீடுகளையும் எண்ணெய் நிறுவனங்கள்தான் செட் செய்கின்றன. அதில், நாங்கள் மாற்றம் செய்தால் தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி எளிதாக அவர்கள் அதை கண்டறிய முடியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்