சென்னை: சென்னையில் உயிரிழப்பு விபத்து வழக்குகள் மற்றும், இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளன. 2021 உடன் ஒப்பிடும்போது,உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022-ல் 10.78% குறைந்துள்ளது. மேலும், 2022 உடன் ஒப்பிடும்போது 2023-ல் உயிரிழப்பு விகிதம் 10% குறைந்துள்ளது. எனவே, 2021 உடன் ஒப்பிடும்போது, 2023-ல் உயிரிழப்பு எண்ணிக்கை இன்று வரை 19.70% குறைந்துள்ளது என்று போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாலை விபத்துகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனை அடைய, கடுமையான விதிகள் அமலாக்கம் மற்றும் முறையான போக்குவரத்து ஒழுங்குமுறை மூலம் முயற்சிக்கிறது. அமலாக்கம் மற்றும் ஒழுங்கு முறை தவிர, சாலைப் பயனாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏனெனில் விபத்துகளைத் தடுப்பது ஒன்றிணைந்த பொறுப்பு என்பதால்,எச்சரிக்கையாக இருக்கவும்,பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், பாதுகாப்பு உபகரனங்களைப் பயன்படுத்தவும் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்றுக்கொள்ளவும் மக்களை வலியுறுத்துகிறது. மேலும், விபத்துகளைத் தடுக்க,பயனுள்ள மற்றும் திறமையான அமலாக்கத்துக்காக பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளை கையாண்டு வருகிறது.
சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதற்கு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளது ஆண்டு வாரியாக விபத்துகள் குறைந்த விவரத்தின் மூலம் தெளிவாகிறது.
» கரூர் ஆட்சியர் முன்னெடுப்பில் வீரணம்பட்டி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு
» ‘ராஞ்சனா’ இயக்குநருடன் கைகோக்கும் தனுஷ் - ‘Tere Ishk Mein’ பட அறிவிப்பு வீடியோ
2021-ம் ஆண்டு, (304 A) சட்டப்பிரிவின் கீழ் 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 269ஆக இருந்தது. 2022-ம் ஆண்டு, (304 A) சட்டப்பிரிவின் கீழ் 238 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 240ஆகவும், 2023-ம் ஆண்டில், (20.06.2023 வரை) 214 வழக்குகள் (304 A) சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 216ஆக குறைந்துள்ளது.
உயிரிழப்பு விபத்து வழக்குகள் மற்றும், இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதைக் காணலாம். 2021 உடன் ஒப்பிடும்போது,உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022ல் 10.78% குறைந்துள்ளது. மேலும்,2022 உடன் ஒப்பிடும்போது 2023ல் உயிரிழப்பு விகிதம் 10% குறைந்துள்ளது. எனவே, 2021 உடன் ஒப்பிடும்போது, 2023-ல் உயிரிழப்பு எண்ணிக்கை இன்றுவரை 19.70% குறைந்துள்ளது.
சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல் துறை, இத்தகைய குறைப்பை, பொது அமலாக்கத்தைத் தவிர, அதிகபட்ச வழக்குகளைப் பதிவு செய்தல் மூலம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தவறான பக்க வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு எதிராக சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அடைந்துள்ளது. தொழில்நுட்ப முன்முயற்சிகளைப் பொறுத்தவரை, GCTP ஆனது 2D - ஸ்பீட் ரேடார் அமைப்பு, வாகன இடைமறிப்பு அமைப்பு (Vehicle Interceptor System), ANPR கேமராக்கள் போன்றவற்றைக் கொண்டு வந்தது நடைமுறையில் பயன்படுத்தி வருகிறது.
மேலும்,சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (iRAD) மூலம் GIS (Geographic Information System) வரைபடத்தைப் பயன்படுத்தி சென்னை நகரம் முழுவதும் 104 விபத்து தடங்களை GCTP கண்டறிந்து,சாலை உள்கட்டமைபபுகளை ரூ. 1 கோடி செலவில் மேம்படுத்தியுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago