உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் ஊதியம்: நிதி ஆதாரம் இல்லாமல் சிக்கித் தவிக்கும் உள்ளாட்சி அமைப்புகள்

By ஆர்.டி.சிவசங்கர்

அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஊதியம் வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாததால், உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் செய்வதறியாமல் உள்ளனர்.

தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஊதியத்தை 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் பேரில் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் பேரில் அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 35 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் போதுமான வருவாய் இல்லாமல், ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க முடிவதில்லை. நிதி ஆதாரம் பெருக்க முடியாத நிலையில், உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க செய்வதறியாமல் நகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: உதகை, குன்னூர், கூடலூர் நகராட்சிகளின் முக்கிய நிதி ஆதாரம் கடை வாடகை தான். உதகை நகராட்சி கடைகள் மூலம் ரூ.2.8 கோடி கிடைக்கிறது. இதில், நகராட்சியில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே ரூ.1 கோடி தேவைப்படுகிறது. உயர்த்தப்பட்ட ஊதியத்தால், இந்த தொகை இரட்டிப்பாகும். கடை வாடகை பிரச்சினை காரணமாக, கடந்த 16 மாதங்களாக வாடகை வசூலிக்கப்படவில்லை.

குன்னூர் நகராட்சியில், பழைய வாடகை தொகையே வசூலிக்கப்படுகிறது.

ஊழியர்களின் ஊதியத்துக்கு அடுத்த படியாக நகராட்சிகளின் பெரும் சுமை மின்சார கட்டணம். உதகை நகராட்சியின் மின் கட்டணம் பாக்கி ரூ.5 கோடியையும், குன்னூர் நகராட்சியின் மின் கட்டணம் பாக்கி ரூ.1 கோடியையும் தாண்டியுள்ளது. நகராட்சிகளின் நிலை இப்படியாக இருக்க, பெரும்பாலான ஊராட்சிகளில் நிதி ஆதாரமே இல்லை. இவை தங்கள் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவே அரசை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலையில், உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்குவது பெரும் சவாலாக இருக்கும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்