சென்னை தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இன்று ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கியமான மூன்று ரத்தக்குழாய்களில் தீவிர அடைப்பு உள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை நிறுத்தி சில தினங்களுக்கு பின்பே இதய அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லையென்றால், ரத்தக் கசிவு ஏற்படும். அதனால், 5 நாட்கள் அறுவை சிகிச்சை தள்ளிப்போனது.

நாளை (இன்று) அதிகாலை அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கான முழு தகுதியைப் பெற்றுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறைதாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE