குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவு கடந்த மார்ச் மாதம் வெளியானது. காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து எழுந்த கோரிக்கையை ஏற்று பணியிடங்கள் 7,381-ல் இருந்து 10,117-ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது இதில் 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் 4 பதவிகளுக்கான கலந்தாய்வு தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்ச்சி பெற்றவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திடம் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியல் இன்னும் வரவில்லை. அதுவந்ததும் விரைவில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு காலி இடங்கள் நிரப்பப்படும்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE