ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ர.15 முதல் ஜுன் 14 வரை 2 மாத காலம் மீன்பிடி தடைக்காலம் ஆகும். தடைக்காலம் முடிந்து ஜுன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கலையரசன் என்பவரது விசைப்படகு பழுதாகி நின்றது.
அப்போது ரோந்தில் இருந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்து அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரிய ரூபன், முத்து, அந்தோணி பிரபு, லெனின், ஜேக்கப், ஜேம்ஸ் பிரதீப், அந்தாணி ஆகிய 9 மீனவர்களை கைது செய்தனர்.
» 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி வழக்கு: விரைவில் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு
» பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்ஐசி தளர்வுகள் அறிவிப்பு
9 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடிக்கவில்லை. அவர்கள் பயணித்த விசைப்படகு பழுதடைந்து விட்டதால் காற்றின் வேகத்தில் நெடுந்தீவு பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட நிலையில்தான் அவர்களை இலங்கைப் படை கைது செய்திருக்கிறது. இதை மீனவர்கள் எடுத்துக் கூறியும் இலங்கை கடற்படை பொருட்படுத்தவில்லை. இந்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது. 9 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வைக்கப்பட்டிருப்பதுடன், படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உடனடியாக இலங்கை அரசுடன் பேசி, மீனவர்களை விடுதலை செய்யவும் பறிக்கப்பட்ட உடைமைகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago