ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்ப ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை இலங்கியேந்தலைச் சேர்ந்த யோகராஜன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: புது தாமரைபட்டி அருகே உள்ள இலங்கையேந்தலில் தான் வசித்து வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி, ஆக்கிரமப்பை அகற்றுமாறு ஊராட்சித் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணி, எல்.விக்டோரிய கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை பொறுத்தவரை அதிகாரிகளின் நடத்தை ஆக்கிரமிப்பை அகற்றவது போல் இல்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவுவது போல் அமைந்துள்ளது. தமிழ்நாடு ஊராட்சி சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற ஊராட்சித் தலைவருக்கு அதிகாரம் கிடையாது. அவர் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கூறலாம். ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால் வட்டாட்சியரிடம் தான் தலைவர் புகார் அளிக்க வேண்டும்.

அதன்படி இந்த வழக்கிலும் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சித் தலைவர் வட்டாட்சியரிடம் புகார் அளித்திருக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்றுமாறு இலங்கையேந்தல் ஊராட்சித் தலைவர் 5.6.2023-ல் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் உண்மையில் ஆக்கிரமிப்பை அகற்ற விரும்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிமை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்