சென்னையில் இயல்பை விட 246% அதிக மழைப் பொழிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இயல்பை விட 246 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நேற்று (ஜூன் 19) காலை 8.30 மணி முதல் இன்று (ஜூன் 20 ) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), தரமணி ARG (சென்னை) ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ , ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சிதம்பரம் AWS (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), மின்னல் (ராணிப்பேட்டை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ பதிவாகி உள்ளது.

மேலும், சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), புவனகிரி (கடலூர்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் ஆலந்தூர் (சென்னை) ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, செங்கல்பட்டு, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), திருவள்ளூர், சென்னை கலெக்டர் அலுவலகம், ஆவடி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்)), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), நந்தனம் ARG (சென்னை), ACS கல்லூரி (காஞ்சிபுரம்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

குறிப்பாக, தென் மேற்கு பருவமழை காலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் 37.7 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட (35.6) மி.மீ 5 சதவீத அதிகம் ஆகும். இதே காலக்கட்டத்தில் சென்னையில் 162 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை (41.1 மி.மீ ) 295 சதவீதம் அதிகம் ஆகும். இதற்கு அடுத்த படியாக காஞ்சிபுரத்தில் 249 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 129 சதவீதம் அதிகமாகவும், விழுப்புரத்தில் 110 செ.மீ அதிகமாகவும் மழை பதிவாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE